எத்தனை ரகம் !!
எத்தனை விதம் !!
குச்சி பொம்மை...!
சோடாபுட்டி...!
ஜடைமாட்டி...!
தேங்காமுடி...!
ராட்டணம்...!
ஊசி வெடி...!
ஏன்... !
சாப்பாட்டின் பெயரை ...!
கூட விட்டுவைகவில்லை !!
சுட்ட அப்பளம்...!
பஞ்சுமிட்டாய்...!
தயிர் சாதம்...!
குண்டு பணியாரம்...!
காரகத்திரிக்காய்...!
கோனல் தோசை...!
அழைக்கும் போது...!
கோபமும்...!
சிணுங்கலும்...!
வேட்கமும்...!
வழிசலும்...!
பார்ப்பதற்கு ...!
எத்தனை அழகு !!
தனி சுகம் !!
!
எனக்கும்...!
பட்டப்பெயர்கள் உண்டு...!
ஆனால், அந்த ஒரு...!
பட்டப்பெயரை ...!
எவர் அழைத்தாலும்...!
கோபம் வரும்...!
அவரை தவிர...!
அதை, அவர் ஒரு முறை...!
மேடையில்...!
ஆம்... மேடையில்...!
நன்றி நவிலும் போது...!
என் “.........”!
என கூறும் போது...!
எனக்கு எல்லையில்லா...!
மகிழ்ச்சி !!
அந்த...!
பட்டப்பெயருக்கு...!
காரணமாய் இருப்பதை...!
நான் ...!
பல் துலக்கும் போது...!
காய் நறுக்கும் போது...!
கரண்டி பிடிக்கும் போது...!
பரிமாறும் போது...!
பாத்திரம் தெய்க்கும் போது...!
ஏன்... நான் ...!
எழுதும் போதும் கூட...!
பார்த்திருக்கிறாரே !!
சாப்பாடு தயாரா?!
“நொட்டாங்கை”...!
என்பார் சில நேரங்களில்...!
அட... !
சொல்லிவிட்டேனே !!
ஆனால்...!
எவரும் அழைக்க...!
அனுமதியில்லை...!
அவரை தவிர !!
!
-அனாமிகா பிரித்திமா

அனாமிகா பிரித்திமா