முறிந்த மட்டையை மாற்றிக் கொடுக்க!
மூன்று பேர் ஓடி வந்தார்கள்.!
பதினொருவரின் எச்சில் பட்ட பந்தில்!
முகவாயில் அடி வாங்கிய முன்னணி மட்டையாளர் !
அநியாயமாய் விக்கெட்டை இழந்தபின் !
அழகாய் ஆடிக்காட்டினான் விளம்பரத்தில் ஒருவன் !
ஆடாமல் இருந்தவனுக்கு கூட ஐந்து லட்சமாம்!
ஓலைக் குடிசையில் கறுப்பு வெள்ளையில் பார்த்துவிட்டு !
காலையில் ஒருவன!
அனாவசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனான்!
இந்தியா அநியாயமா தோத்துப் போச்சாம்!
-முத்தாசென் கண்ணா

முத்தாசென் கண்ணா