01.!
ஆய பயன்!
----------!
வாழைமரத்தின் பயன் பற்றிய!
கட்டுரையொன்றை!
எழுதி வரச்சொன்னேன்!
ஆறாம் வகுப்பு சிறுவனிடம்.!
அவன் ஏதோ தப்பாக!
புரிந்துக்கொண்டு!
மாமரம் பற்றி!
எழுதி எடுத்து வந்தான்.!
திட்ட மனமில்லாமல்!
மாம்பழமொன்றை பறித்து தின்று!
மதிப்பெண் போட்டேன்.!
!
02.!
ஒரு அதிசயம்!
-------------!
சற்றுமுன்பு!
கேட்ட கேள்வியொன்றுக்கு!
இம்மாம் பெருசு பூமியென்று!
இரண்டு பிஞ்சு கைகளையும்!
விரித்து பதில் சொன்னவள்!
சென்றபிறகு!
இம்மாம் பெருசு என்று!
நானும் கைகளை விரித்தேன்!
நான்கு அடி கூடுதலாக!
பூமி விரிந்து சுற்றியது.!
!
03.!
வாசிப்பு!
-------!
புதுப்புத்தகங்களை!
வாங்கியவுடனேயே!
வாசனைப் பிடித்து!
எல்லா பக்கங்களின்!
எழுத்துக்களையும்!
எப்படியோ!
உறிஞ்சி விடுகிறார்கள்.!
குழந்தைகள் படிக்கவில்லையென!
குறைச்சொல்ல!
இனி என்ன இருக்கிறது?
என். விநாயக முருகன்