மரம் செடி இலைகள் போல
மண் வாழும் உயிர்கள் போல
மூச்சுவிடத் தெரிந்த முதலை
நீருக்குள் எதற்காய் போச்சு
கூடுகள் குகைகள் இன்றி
நீரடியில் உறங்கலாச்சு.
நரிக்குகையில் சிங்கம் மோதும்
குயில் முட்டை காக்கைக் கூட்டில்,
காக்கைகள்? மனிதர் வீட்டில்
புற்றுமண்ணில் எறும்பு கட்ட
பாம்புக்கு அதுவே கட்டில்
உன் சுவர் எனது வீட்டில்
என் கலப்பை உனது வரம்பில்
அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்
எண்ணமே முதலைக்கில்லை. நீரடி எல்லாம் இங்கே
பூமித்தாய் கருப்பைப் போல
எல்லைகள் இல்லா தேசம்
திசைகூட அழியும் ஆங்கே
மனிதர்கள் பிரித்துப் போட்ட
நிலம் பார்த்து சோகத்தோடு
அழுவதே முதலைக் கண்ணீர்
தெரிந்தபின் குறை சொல்லாதீர்
பாலக்குமாரன்