மலர்கள் மண்டிக் கிடந்த
புல்வெளிப் புடவை உடுத்திய
பூங்கா பெண்ணின் மடியில்
நீ புத்தகங்களை தள்ளி வைத்து
என்னை மடியில் அள்ளி வைத்து
ஏதேதோ பேசிக் கொண்டிருக்கையில்
பதற்றத்துடன் எழும்பிப் போய்
பார்வையற்ற ஒருவரின்
கரம் பிடித்து
நீ சாலை கடக்கச் செய்த
அந்த ஒரு நொடியில் தான்
நம் காதலுக்கான கண்ணியம்
மறைந்திருந்தது!
காதலின் தேவதையைக் கண்டது போல்
என் உள்ளமும் உறைந்திருந்தது
சலோப்ரியன்