இருபது ஆண்டுகளாக!
இந்த வீடும் என் அங்கம்.!
நிலத்தடி உப்பு!
நீரில் பெயர்ந்துவிடும் சில!
சுண்ணாம்பைப் பார்க்கும்போது!
சோகம் தொற்றிக்கொள்ளும்!
எனது கண்களில்.!
இந்த நிலத்தடி நீர்!
இப்படி உப்பாய்ப்போனது!
ஒரு வேளை நான்!
ஓயாமல் சிந்திய!
வியர்வைத் துளியாலிருக்கும்.!
செங்கலின் சிவப்புகளில்!
சின்னச் சின்னதாய்!
சிந்திய குருதி கலந்திருக்கும்.!
தோட்டத்தின் பச்சையில்!
தினம்தோறும் தவறாது!
நான் ஊற்றிய அடிகுழாய்!
நீர் கலந்தே இருக்கும்.!
மெத்தை சுகத்தை விட!
மெருகேறிய இந்தத்!
தரையில்தான் எனது!
தினசரித் தூக்கம்.!
அங்குலம் அங்குலமாக!
அங்கமெங்கும் கலந்துபோன!
வீட்டை விற்றுவிட்டு!
வீறுநடை போட்டுச்!
செல்கிறேன் எனது!
சொந்த ஊருக்கு.!
இந்த வீடும்!
இப்பொழுது புகுந்தவிட்டில்!
இருக்கும் என் ஒரே மகளும்!
இனி புதிய கைகளில்!
இன்பமாய் இருந்தாலே போதும்.!
- ஒளியவன்!
பாஸ்கர்
ஒளியவன்