கருவினில் உருவாகி உயிராக!
உதித்திடும் உண்மை முகம் !!
பள்ளியில் பயின்றிட பாதம்!
பதித்திடும் பால்ய முகம் !!
கல்லூரிக் காலத்தை களிப்புடனே!
கடந்திடும் இளமை முகம் !!
கனவுகள் நிறைந்த நெஞ்சோடு!
மணக்கோலம் காணும் முகம் !!
மக்கட்பேறு பெறுவதால் பேரின்பம்!
பெற்றிடும் பெருமைமிகு முகம் !!
வளர்த்திட்ட செல்வங்கள் வளமாக!
வாழ்ந்திட வழிகாட்டும் முகம் !!
ஓய்வுறும் வயதானால் வாடியமுகமோடு!
ஓய்வுபெறும் ஓய்வறியா முகம் !!
பெற்றவைப் பெற்றதை கொஞ்சி!
மகிழ்ந்திட்டு மலர்ந்திடும் முகம் !!
கடந்தகால நினைவுடனே காலத்தைக்!
கழித்திடும் களைப்படைந்த முகம் !!
முடியும் வாழ்வினை வரவேற்கக்!
காத்திருக்கும் களையிழந்த முகம் !!
உயிரற்ற உடலாக உறவும்ஊரும்!
வழியனுப்பும் இறுதி முகம் !!
மறைவிற்குப் பின்னாலே உற்றராரும்!
மற்றோரும் மறந்திடும் முகம்

இரா.பழனி குமார்