ஒரே உதையில் து£ரப்போய் விழுந்த!
பொம்மை சொன்னது!
இப்படி எல்லாம் நடந்திருக்காது!
எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால்.!
நீயற்ற பிரபஞ்சம் எதுவுமில்லை!
பிரபஞ்சமே நீயெனச் சொல்லியது!
காற்று!
கை நிறைய பரிசுப்பொருள்களோடு!
வரவேற்றது எதிரே ஒரு கவிதை.!
முலை திருகி நகரெரித்த!
என் தோழி கண்ணகிக்கு!
இன்னும் ஒற்றை முலை.!
பறவையின் பெயர் கேட்டேன்!
மௌனம்!
மௌனத்தை மொழிபெயர்த்தேன்!
பெயர் சொல்லி பறந்தது பறவை!
மரம்கொத்தி பறவையின் அலகில்!
எத்தனை மரங்களின் ருசி!
என்னிடம் எதுவும் சொல்லவில்லை!
புது வீடொன்றை கட்டிக்கொண்டது!
வண்ணத்துப்பூச்சி!
கதவுகளை அறைந்து சாத்திவிட்டாய்!
கைகளை பிசைந்து கொண்டு!
வெளியே ஒரு நட்சத்திரம்.!
நீ கட்டிய வீட்டில்!
வேறு எல்லாமும் இருந்தது!
வெளியே நான் எட்டிப்பார்ப்பதற்கு!
ஒரு ஜன்னலைத் தவிர.!
!
-ரசூல்

ரசூல்