கால்சட்டைப்பையில்!
கற்களை நிரப்பிக்கொண்டு!
காலையிலிருந்து அலைகிறான்!
சிறுவன் ஒருவன்!
குருவியைத்தேடி...!
அவனது இலக்கு!
பச்சோந்தியாக இருந்திருந்தால்!
ஊரில் இழவுகள்!
பல விழுந்திருக்கும்!!
வாழ்க்கைக் குறிப்பு!!
மின்சாரம் இல்லாத இரவில்!
முழுதும் எரிந்து தீர்ந்த!
மெழுகுவர்த்தியொன்று!
தனது கரிய புகையால்!
சுவரில் எழுதி மறைந்தது!
'இன்றைய இரவு!
என்னால் ஒளியூட்டப்பட்டது'!
என்ற சிறு குறிப்பை...!
நாய்கள் மொழி!!
பசியென்று!
சோறுகேட்டு வந்தவனிடம்!
எதுவும் இல்லையென்று மட்டுமே!
சொல்ல முடிந்தது!
மனிதர்களால்...!
வீதி நாய்கள் தான்!
குரைத்துச் சொல்லின!
'உன் அழுக்குச் சட்டை!
கிழிந்திருக்கிறது' என!
முதிர்க்கன்னி!!
கருவேலங்காட்டில்!
விறகு வெட்டும்போது!
வித்தியாசமாய் உணர்ந்தேன்!
விவரமாய்க் கேட்ட!
வள்ளி காதில் சொன்னாள்...!
அதுவரை தெரியாது!
வயதுக்கு வருவது பற்றி...!
இன்றுவரை தெரியாது!
வருவதன் பயன் பற்றி

நாவிஷ் செந்தில்குமார்