அது நிகழ்ந்த விடக் கூடாதென!
அங்கிருந்த எல்லோருமே விரும்புகிறார்கள்!
மாபெரும் துயரம்!
கவிந்து கொள்ளும் நிலை குறித்து!
யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்!
துப்பாக்கி, குண்டு வீச்சின்!
ஓசைகளை விஞ்சுமாற் போலமைந்த!
காவிகளின் கை விசிறிகள் திகைப்பையே தருகின்றன.!
கூடவே பயத்தையும்!
தன் முகத்தின் அடையாளம் கூட!
மற்றையவருக்குத் தொந்தரவாகக் கூடாது என்று!
கறுப்புத் துணியால் முகத்திற்குத் திரையிட்ட பெண்கள்!
நினைத்துக் கூட பார்க்கவில்லை!
அக் கறுப்புத் துணியே !
பலருக்கம் உறுத்தலாக அமையுமென்று.!
வன்முறையின் விலை!
அடையாளங்களின் முதுகில் தான் குத்தப்படுகிறது.!
கறுப்புத் துணிகளை கழற்றிவிடத்!
துடிக்கும் காவித்துணிகளை எப்படியேனும் தடுத்தாக வேண்டும்.!
அறையைச் சூழ !
காவல் நிற்கும் ஆண்கள் ஆறுதல்தான்.!
இருந்தும்??!
எல்லோரும் அரசுக்கு !
விரலில் மை பதித்து வாக்களித்த பின்!
வாக்குச் சீட்டைத்தான் பெட்டியில் போட்டார்கள்!
காவல் நிற்கும் நம் ஆண்களோ!
மையோடு சேர்த்து கைகளையுமல்லவா!
போட்டுவிட்டார்கள்.!
கைகளற்ற ஆண்களால்!
என்னதான் செய்ய முடியும்?!
வாய் குறித்து எதுவும் பேசுவதற்கில்லை.!
சமூகத்தின் புதைகுழி மேல் நின்று கொண்டு!
கைகட்டித் தலை குணிந்து!
'குனூத்' ஓத !
அனுமதி கோரும் அஹிம்ஷை வாய்கள் அவை.!
கறுப்புத் துணிகளின் !
கவலைகளும், பயமும் நிரந்தரமாகிடுமோ?!
மார்க்கமே!!
எம் ஆண்களுக்கு !
தாடி வளர்க்கப் பணித்த நீ !
ஏன் மீசை வளர்க்கப் பணிக்கவில்லை?!
!
குறிப்பு: இலங்கை முஸ்லிம் தலைவர்களைப்பற்றியது

முஷாரப் முதுநபீன்