சிந்து கின்ற குருதியும் சிதறிப் போன!
வாழ்க்கையும்!
அஞ்சும் அவலமும்!
அலறும் உறவுகளும்!
அடிவயிற்றைப் பிடித்து!
கெஞ்சுகின்ற ஓலம்!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!
அவலைக் குரல்களெலாம் ரணங்களை!
இழந்து!
யுகங்களைக் கடந்து!
அந்தி அந்தியாய்!
சிந்திக் கொண்ட பிரளயத்!
துன்பங்களும்!
அடிமந்தில் ஓங்கி அலறுகிறதே!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!
ஆழப் பதிந்த ஆற்றொணாத்!
துன்பத்தை!
அள்ளி எறிந்து எறிந்தே -எம்!
கைகளின் மூட்டுக்கள் தேய்ந்து!
விட்ட வலுவிழந்த!
அங்கவீனர்கள் நாம்!
ஜயோ!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...! !
வரலாற்று ஏடுகளில் கடும் இரத்தினச்!
சுருக்கங்களாய்!
பதிந்து விட்ட - எம்!
இரத்த சரித்திரங்களை!
அழிப்பத்ற்காய்!
கண்ணீரை அள்ளி இறைத்து இறைத்தே!
உவர் நீரில்!
மூழ்கிவிட்ட!
கண்கணிகள் நாம்!
ஜயோ!
விடியலுக்கு ஏன் எங்களை!
மட்டும்!
பிடிகுதில்லை...!!
முல்லைக்கேசன்