நேற்று என் வீட்டிற்கு திடீரென!
வந்த உன்னை!
சாவகாசமாய் உபசரிக்க!
கூச்சப்பட்ட நான்!
என்னை மண் சுவருக்கு பின்னும்!
வந்த உன்னை!
மனச்சுவருக்கு முன்னும்!
மறைந்து கொண்டு புழுங்கித்!
தவித்தேன்!
நீ வரும் போதே!
துணைக்கு இன்னொன்றையும்!
அழைத்து வந்து விட்டாய்!
உன் கருங்கூந்தல் லயிப்பிற்காய்!
கவர்ந்து விட்ட கார்!
மேகங்கள்!
தன்னினமென்று கூடி வந்ததால்....!!
உன்னையும் தன்னையும்!
ஒப்புக்கு வைத்து!
பெற்ற பெறு பேறு வந்ததால்!
அழகில் தோற்றுவிட்ட!
அத்தனையும் அல்லோல கல்லோலப் பட்டதால்!
காருக்கு வேர்க்கத் தொடங்கி!
அழுகையில்!
முடிந்தது!
அவள் என் கையில், என் வாழ்க்கையில்!
முடிந்தது!
சூரியக் கதிர்களுக்காய்!
கூரைக் கிடுகுகளின் வரிகளும், மேய்ச்சலின்!
இடைவெளிகளும்!
விலக்கி விடப் பட்டு!
தினம்!
அவ் ஒளியிலேயே ஜீவனத்திற்கு!
தீனி போட்டுக்!
கொண்டிருந்தது!
என் ஓலை வீட்டுக் கூரைகள் என்று!
உனக்குத் தெரியாது தானே !!
நானும் உனக்குச்!
சொன்னதில்லை!
மண்சுவர்களின் பின் மனங்களைப்!
புதைத்துக் மழுங்கிய!
சிரிப்புடன் - நான்!
தளம்பியது இதற்காக அல்ல!
கால போகத்திற்கு!
வீசிய கச்சான் காற்று கட்டி!
இழுத்து வந்த!
சோளக் காதிர்களைப் போல் என்!
மனைக்கு திடீர் அனுமதியை!
திருடிக் கொண்ட!
உன்னை பாங்காய் உபசரிப்பதா? இல்லை!
சிந்தும் மழையில்!
சிதைந்து கொண்டிருக்கும்!
மண் சுவர்களுக்கு!
மாங்கல்யம் அறுத்துக் கொண்டிருக்கும்!
ஓட்டைக் கூரைகளுக்கு!
அலுமினியப் பானைகளை அங்காங்கே!
அடுக்குவதா?!
என்பதுதான்
முல்லைக்கேசன்