காற்றே, என்னை தழுவிவிட்டு செல்வாயாக
சுக நித்திரையில் என்னை ஆழ்த்தி விடுவாயாக
உயிர் கலையாமலிருக்க, எண்ணங்கள் சிதறாமலிருக்க
மண்வாசனையில் மனதை கலந்து செல்வாயாக
இன்ப செப்பனங்களின் வழியே போவாயாக
கருத்த மேகங்களின் இடையிலே பயனித்து
என்னை மீண்டும் உயிர்ப்பித்து தருவாயாக
பச்சை இலைகளுக்கு நடுவே சலசலத்து வந்து
பின் தென்றலோசையில் நீ எனக்கு தாலாட்டு பாடி
நானுறங்க சாய்ந்தாடும் தொட்டிலாய் இருப்பாயாக.

யுவ அதிதி