மண்ணும் மரமும் - மு. பழனியப்பன்

Photo by Jr Korpa on Unsplash

மு, பழனியப்பன் !
பழைய மாளிகை !
ஏலத்திற்கு வந்தது !
பத்து பன்னிரண்டு !
சுத்தத் தேக்குத் தூண்கள் !
நான்கு மிகப் பெரிய கதவுகள் !
எதற்கும் !
எந்தக் குறைபாடும் வராமல் !
லாரியில் ஏற்றப்பட்டன. !
உடைந்த மாளிகை !
இடிந்த செங்கற்கள் உதிர்ந்த காரைகள் !
ஒரே ஒரு தூண்மட்டும் !
உளுத்துப்போய் !
ஏலம் எடுத்தவன் !
அதனை எதற்கும் ஆகாது !
என்று விட்டுவிட்டான் !
உளுத்த மரத்திற்கு !
இப்போது உற்சாகம் !
நான்தான் இந்த மாளிகையைத் தாங்கி வந்தேன் !
ஏதோ போதாத காலம் !
ஏலம் விடப்பட்டு விட்டது !
என்னைத்தான் முதன்முதலாக !
இந்த மாளிகையில் நட்டார்கள் !
மற்றவர்கள் எல்லாம் பிறகு வந்தவர்கள் !
அவர்கள் எல்லாம் இப்போது லாரியில் ஏறிப் போய்விட்டார்கள் !
அவர்களிடம் குறைகள் ஏராளம் !
குறையே இல்லாதவன் நான் மட்டுமே !
நான்மட்டுமே இந்த மாளிகை வந்த நாள் முதல் இருக்கிறேன் !
இனிமேலும் இருப்பேன் !
நான் வானத்தையும் தாங்குவேன் !
பூமியையும் தாங்குவேன் !
காற்றே என்னைக் கேட்டுத்தான் இயங்கும் !
அதற்கு வழி தெரியாது !
என்வழிப்படி தான் அது நடக்கும் !
என்னைவிட உறுதியானவன் உலகத்தில் இல்லை !
என்னைவிட நிறைவானவன் யாரும் இல்லை !
பேசிக் கொண்டிருந்த !
உளுத்த மரத்தில் !
சிறுவன் ஒருவன் !
சிறுநீர் கழித்து !
மானபங்கப் படுத்தினான் !
அப்போதும் அது பேசியது !
முன்னொரு காலத்தில் இப்படித்தான் !
ஒரு சிறுவன் வந்தான்
மு. பழனியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.