புதிதாய் ஒரு கவிதையை!
சிந்திக்கும் போது!
என்னை கடந்து செல்கிறது!
ஒரு வண்ணதது பூச்சி.....!
ஒற்றை வார்த்தைக்காக!
நான் காத்து கிடந்த போது!
காதுகளில் நிறைகிறது!
குயிலின் குரல்.....!
மூளையின் அணுக்களில்!
பரவி கிடக்கிறது!
குழந்தையின் புன்னகை....!
தெருவோர நாய் குட்டியின்!
தனிமை தவிப்பு.....!
போக்குவரத்து நெரிசசலில்!
கையேண்தும் சிறுவன்....!
நிமிடங்கள் சிதறி!
கலைகையில்!
வந்து நிற்க்கும்!
முதல் வரியொன்று....!
எழுத முடியாமல்!
தடுக்கிறது!
புகை படத்தில்!
என்னை பார்க்கும்!
அம்மாவின் பார்வை