01.!
கடல்!
--------!
முத்துக்கு விளைநிலமே!!
உயிர்சத்துக்கு உறைவிடமே!!
முக்கால முணர்ந்தோன்!
உனக்களந்தது!
முக்கால் எனுமொதுக்கீடு!
உப்பிட்டவரை உள்ளவரை நினை!
இவ்வொப்பில்லா மொழிக்கேற்ப!
நினைக்கிறோம்!
எம்மை நனைக்கிறோம்!
எமக்கப்புறமும் நிலைக்கும் உன்னை.!
02.!
நிலா!
----------!
வானவெளி வீதியிலே!
பவனி வரும்!
வெண்மணியே!!
ஊரடங்கும் வேளையிலே!
விழித்திருக்கும் உன்!
கூர்விழியே!!
குறையிலும் அழகாக!
நிறையிலும் பொலிவாக!
ஒளிவீசும் தண்ணொளியே!!
முயற்சிக்கு உந்துதலாய்!
தளர்ச்சியை நீக்குவதாய்!
அமைவது உன்!
தனிச்சிறப்பே!!!
03.!
மலை!
---------!
மண்ணின் உயர்வே!!
மழைஉன் கொடையே!
நலமா? எனும்மேகத்தை!
நீஅளவளாவும் வேளையிலே!
மண்ணைச் சேரும்!
பொன்னாம் மழைநீர்!
உலகை உய்விக்கும்!
பூதங்கள் ஐந்தும்!
உன்னில் கொண்டு!
மேன்மை கண்டாய்!
மாந்தர் எமக்கு!
நீயோர் உவமை!
உனக்கோர் உவமை!
சொல்வாய் மலையே
சத்ய சுகன்யா சிவகுமார்