முகில்களால் மூடிய வானம்
திகில்களால் மூடிய பூமி
வாடை காற்று ஒருவித சிலிர்ப்பை
சீண்டி விட்டு போக
பனி விளக்கி, பால்முகம்
காட்டி எங்கோ இழுத்து போகிறாய்.
அங்கு உன்னை போலவே
கோடிகணக்கான தேவதைகள்,
சிவப்பு கம்பள வரவேற்ப்புவேறு,
சொர்க்கத்து உணர்வு தொற்றிக்கொள்ள,
சொர்க்கத்து சுவரெல்லாம் உன் பிம்பம்.
திருமணம்தான் சொர்கத்தில் நிச்சயமாகும்.
காதல் நமக்காக - ஒரு
சொர்கத்தையே நிச்சயத்து
வைத்திருக்கிறது பார்த்தாயா!
நீ ,
மிதந்து தான் போகிறாய்,
இருந்தாலும் சிரிக்கிறது உன் கொலுசு.
புகைக்குள் ஒழிந்த - பட்டாம்பூச்சியாய்
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்.
உன் சிறகை எனக்கு பரிசளித்து விட்டு,
சத்தம் இல்லாமல்
சேர்த்துவைத்த
சமத்து முத்தமெல்லாம்
சரவெடி சத்தமாய்
சகட்டு மேனிக்கு
மேனியெல்லாம் நானைக்கிறாய்.
கையில் ஏந்த சொல்லி
காதலும் - காமமுமாய்
கண்கட்டி வித்தை காட்டி
கனவுகள் எல்லாம்
கண்சிமிட்டி மறைய
அலறியது அலாரம்
சீமான்