நினைவில் பால்யம் அழுத்தம்
பொழுதுகளில்
தொலைபேசியில் அழைக்கிறாள் சகோதரி
உறவுக்கூடத்தில் சூன்யமாகிவிட்ட
என் பகுதியின் இருளை
தடவிக் கொடுத்தபடியே நலம் விசாரிக்கிறாள்
அலுவல், இருப்பிடம், போக்குவரத்து,
அனைத்தும் விசாரித்து முடித்தவள்
நடக்காது என்றாலும் நப்பாசையோடு
கேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று
அவதாரத்தை சகிக்க முடியாதவளுக்கு
ஆன்மாவையாவது சந்தித்துவிடும் பிரயாசை போலும்

லிவிங் ஸ்மைல் வித்யா