கண்ணாடி சன்னல்கள் வைத்த படிக்கும் அறை
சுற்றிலும் வேப்ப மரமும், மேப்பிள் மரமும்
வீட்டின் பின்னே காடு
கதை எழுத கணினி
இசையுடன் கூடிய எழுதும் இடம்
அலுப்படைகையில் சன்னல் வெளியே
நூறு நிறத்தில் பறவைகள், அணில்கள்
மதமற்ற உலகம், நிறமற்ற மனிதர்கள்
நீலக் கடலும், பச்சை ஏரியும்
தாயின் அன்பும் வேண்டும்...வேண்டும்.
வாகன ஓசையும், மக்கள் ஓசையும்
மதத்தின் வெறியும், மனித வெறியும்
கட்டிடங்கள் இடிவதும், விமானம் வெடிப்பதும்
பசியும், பொறாமையும்
வெறுப்பும், போட்டியும்
அமைந்த நாட்கள் மட்டுமாவது
அண்ட சராசரத்தின் கறுப்புத் துளையே
என்னையும் விழுங்கி விடு
கீழே விழும் இடமாவது
என்னுடைய காணி நிலமாக வேண்டும்
அலர்மேல் மங்கை