சில சமயங்களில் உனக்கு தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும், உணர்ந்தும்
கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தபடி...
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்!!-
லிவிங் ஸ்மைல் வித்யா