எந்த மண்ணும்!
தன்மீது விழுந்த!
நீரை விலக்குவதில்லை!
செம்புலப்பெயல் நீராவதன்றி...!
எந்த மரமும்!
தன்மீது படரும்!
கொடியைப் பிரித்தெரிவதில்லை!
பகிர்வதையன்றி...!
எந்த இலையும்!
தன்மீது தவழும்!
தென்றலைத் தவிர்த்ததில்லை!
தழுவுதலன்றி...!
எந்த விலங்கும்!
தன்னினத்தையே!
அழிப்பதில்லை!
காப்பதன்றி...!
மனித இனம் மட்டும் !
மண்ணில் பிறந்தும்!
மழையில் நனைந்தும்!
தென்றலை நுகர்ந்தும்!
தாவரங்களைப் புசித்தும்!
விலங்காயிருந்து பின் !
மனிதர்களாய்...!
மற்றைய மகத்துவங்களை!
மட்டும் மறந்தவர்களாய்...!
தன்னையே...!
தன் இனத்தை மட்டுமே!
யுதங்களோடும் !
யுதங்களற்றும் அவ்வப்போது !
புசித்தும், புசித்தப்பின்பு !
சிரித்தும்... மனிதம்...!!
!
-இரவி கோகுலநாதன்
இரவி கோகுலநாதன்