ஒளி கொடுத்து
உலகைக் காத்திட
பூமியிலிருந்து பிரிந்து சென்று
இருள் நீக்க
நிலவாகினேன்!
தூரத்துச் சூரியன்
சிரித்துக் கொண்டது!
கொஞ்சம் கொஞ்சமாய்
பூமியின் வட்டப்பாதையில்
என்னையுமறியாமல்...
அண்ணாந்து பார்க்கவோ
அள்ளிக் கொள்ளவோ
தயாரில்லை எவரும்!
அவ்வப்போது
உணவோடு என்னையும்
உட்கொள்கிறார்கள்
குழந்தைகள் மட்டும்
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி