அவனுக்குள்ளே அவள் அமிழ்ந்திருப்பதால்!
அவளை அவனால் அறியமுடியவில்லை!
அவனோ அவளோடு வாழ்வதாய்!
அலட்டிக்கொள்கிறான் அவ்வளவேதான்.!
அவளோ அவன்தான் வாழ்க்கையென்று!
வாழ்வின் இறக்கைகளை இழந்துவிட்டு!
சிறகுகளைச் சிதைத்துவிட்டு சிறைப்பட்டாள்!
மனிதனுக்குள்ளே சிறைப்பட்டிருக்கும்!
மானிடளை விடுதலை செய்வதுதான்!
உண்மையான விடுதலை!
இதை இவளே உணராதபோது!
இவளுக்கு எப்போது விடுதலை?!
இயந்திரப் பொம்மலாட்டப் பாவையாய்!
இயங்கிய இவள்!
தன்னைத்தானே அழித்துக்கொண்டு!
வசதியாய் வாழ்வதாய் வாயாரச்சொல்லி!
சிலபொழுதுகளில் சிற்றின்பத்தில் சிலாகித்து!
வாரிசாய் சிலஉடல்களை உற்பத்தி செய்துவிட்டு!
வசதி வந்தபோது இறந்துபோனாள்!
விடுதலை பெறாமலே விடைபெற்றுச்சென்றாள்.!
மரித்துப்போன மானிடளை மறந்தான்!
மறுபடித்தொடங்கினான் தேடலை…!
கலாநிதி தனபாலன்