காலம் !
1. !
பிரபஞ்சங்களின்.. !
உலகங்களின்.. !
இயக்கங்களின்.. !
தாய். !
!
2. !
கள்ளுண்டு மயங்கிக் கிடந்தேன், !
காலம் கடந்து சென்றது... !
கண்விழித்த போதெல்லாம், !
காலம் கடித்துத் தின்றது. !
காலம் கடித்த காயங்கள், !
வடுக்களாய் உடலெங்கும்... !
வடுக்களை எண்ணி.. எண்ணி.. !
காலம் கணக்கிட்டுக் கடந்தேன். !
இன்னும் வராத காயங்களில், !
பூத்த மலர்கள் காலைப் பனித்துளி சூரிய உதயம் !
மாலையின் நிழல்கள் என, !
உலகம் கடந்து சென்றது... !
ஈரம் காயாத உணர்வுகளில் !
இன்னும் விடியாத பொழுதுகள், !
வெளிச்சம் தேடும் வேட்கை என, !
வாழ்க்கை நகா¢ந்து சென்றது. !
!
3. !
இந்த இடத்திலேயே !
நின்று போனது என் வாழ்வு. !
பலகோடி யுகங்களுக்கு முன்பும் !
இப்படியே... !
கல்லாய்.. சிலையாய்.. மரமாய்.. !
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு !
நகராமல் நின்றிருந்தது என் வாழ்வு. !
நீடித்த ஆயுளோடு. !
முடியவே இல்லை என் பயணம் !
நின்றபடி.. நடந்தபடி.. பறந்தபடி.. !
என்றும் முடிந்ததே இல்லை !
எனது பயணம். !
இதுவரையிலும் என்னைத் தொட்டதும் !
தொடா¢ந்ததும் எதுவும் இல்லை !
என் கனவுகளைத் தவிர. !
!
4. !
என் !
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் !
காலத்தின் பக்கங்களையே புரட்டுகிறேன். !
என் !
எழுந்து, நிமிர்ந்து அசையும் !
ஒவ்வொரு அசைவிலும் !
காலத்தின் அசைவுகள். !
என் ஆற்றல் செலவழிப்புகளிலெல்லாம் !
காலத்தின் மின்சாரம் செலவழிய, !
காலத்தைப்பற்றி எழுதும்போது மட்டும் !
ஏனோ, !
காலம் நின்றுபோகிறது. !
!
5. !
!
உலகம் முழுவதும் !
காலம், !
பொடிபோல், நுண்துகள் போல் பரவியிருக்க, !
காணும் பொருள் அனைத்தின்மீதும் !
போர்வைபோல் மூடியிருக்க, !
ஏதைத் தொட்டாலும் காலத்தையே தொடுகிறேன், !
என்று எண்ணத் தோன்றுகிறது. !
!
6. !
காலத்தைக் கேட்டேன். !
காலமே.. காலமே.. !
காலமற்ற வெளியுண்டோ ? !
காலம் சொன்னது. !
காலனுக்கு வாழ்க்கைப்பட்டுக் !
காலமுண்ணும் மானுடா, !
காலமற்ற வெளியெலாம் !
காலமே படைத்தது. !
!
-- காசிகணேசன் ரங்கநாதன்
காசிகணேசன் ரங்கநாதன்