புதிதாக நான் எதை பற்றி!
எழுதப் போகிறேன்!
எல்லாமே பழகிப் போய்விட்டது!
என் கனவுகளையோ!
மகிழ்வுகளையோ!
ரணங்களையோ...!
கண் நிறைத்த இடங்களையோ!
கவர்ந்த பெண்களையோ!
ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ!
வேறு என்ன இருக்க போகிறது!
என் கவிதைகளில்....!
என் தவறுகளை மறைத்து!
எழுதும் இவற்றில் என்ன உண்மை!
இருக்கப் போகிறது!
நெருப்பால் சுட்டால் எரிவது போல!
என் நிதர்சனமும் தினமும் !
சுட்டு பொசுக்குகிறது என்னை...!
என் கேவலங்கள், காம வக்கிரங்கள்!
சுயனலம், பொறாமை மறைத்து!
காதலையும்,மலர்களையும்!
தென்றலயும் மட்டுமே!
எழுதுவதால் நான் என்னில் !
யோக்கியமாகி விட முடியாது..!
இங்குள்ள அனைவரையும் விட!
நான் கேவலமானவனே

சம்பத்குமார்