தனிமையில் நான்
தேநீர் அருந்தும் போதும்
நாற்காலியில் கண்கள் மூடி
சாய்ந்திருக்கும் போதும்
வியர்வை சிந்த விளையாடி விட்டு
தரையில் வீழ்ந்திருக்கும் போதும்
சிந்துகின்ற மழையை பலகணி வழி
பார்த்து ரசிக்கின்ற போதும்
இதயம் வருடும் இசையை
செவிகள் கேட்கும் போதும்
தூக்கம் தொலைத்த
நீண்ட இரவுகளின் போதும்
ஏன் சில வேளைகளில்
தூங்குகின்ற போதும்
இப்படி தனிமையென்னைத்
தவிக்கவிடும் பொழுதுகளிலெல்லாம்
மெளனம் வந்து மனதுள் அமரும்.
ஆனால் நீயோ
மெளனத்தை விரட்டி விட்டு
மகுடம் சூடிக் கொள்வாய்.
தனிமையின் பொழுதுகளில்
என்னோடு பேசுகின்ற மெளனம் நீ!
- சலோப்ரியன் (ஆன்டணி)
சலோப்ரியன்