கரிக்குருவி!
நெடுமரத்தில் உட்கார்ந்திருக்கிறாய்!
உன் பஞ்சுச் சிறகுகள் உதிர்ந்த!
ஒரு பெரும் உலர்ந்த பொழுதின் பின்!
வெள்ளிகள் வற்றிய!
இருண்ட வானத்தில்!
நிறமறியாத கண்களால்!
எறிந்துகொண்டிருக்கிறாய்!
திசைகளின் மீது குருட்டுப்பாடலை!
ஊழித்தீ மூண்ட காட்டின் வெம்மையில்!
உதிர்ந்த உன் சிறகுகளையள்ளி!
காற்றுத்திசைகளில் கொட்டிற்று!
கதறிய உன் குரல்!
வானம் முழுவதிலும் மோதிக் கரைந்தது!
சொற்களற்ற இ;ருள் வெளியில்!
தனித்துப்போனாய் நீ!
கரிக்குருவி!
அலை மடிப்புக்களில் அழிவுற்றது!
உன் நிழல்!
என் கண்ணாடிச் சட்டத்தில்!
காற்றுவாய் ஊதிச் சடசடக்கிறது!
உன் பஞ்சுச் சிறகுகள்!
ஞாபகங்கள் வறளாத!
வெள்ளையொளிப் பொழுதுகளில்!
காடுகளின் விசித்திரங்களில்!
ஒலித்தது உன் குரல்!
சொற்களில் உடைவுகளேது!
நதி நீரில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது!
முதிய உன் மனம்!
கரிக்குருவி!
உடைந்து சிதறிய வார்த்தைகளோடு!
வந்து நிற்கிறாய் ஜன்னலில்!
என் மனதை நொருக்கியபடி!
உன் சிறகடிப்பில் விரிந்த உலகம்!
சூனியமாகிவிட்டது இப்பொழுது!
பூச்சியக்கணங்களின் மேலே!
மூங்கில்த்தீ மூழ்கிறது!
கரிக்குருவி!
எப்படி மீட்கப்போகிறாய்!
நொருங்குண்ட என் மனதிலிருந்து என்னை!
உதிர்ந்த பஞ்சுச் சிறகுகளிடையிருந்து!
வனப்பொளிரும் உன்னை!
-சித்தாந்தன்

சித்தாந்தன்