மணவாளன் சென்ற பிறகு
மௌனமாகவே இருந்தாள் ...
சென்றது மணவாளனா இல்லை
அவளோடு கலந்த வண்ணங்கள்...
இறந்தும் பூ பொட்டு அலகாரத்தோடு அவன்
இருந்தும் வானவில் பார்த்து ஏங்கும் நிலவாய் இவள் ..
சமூகம் வைக்கும் பெயர்களுக்கு
பயந்து நண்பர்களை மறந்தாள்...
மாதம் மூன்று நாட்கள் இலவச இணைப்பாய்
தொலைந்தே இருந்தாள் நல்ல காரியத்தில் ...
பால்நிற உடையில் தனித்திருக்கும்
இவளுக்கு பெயரும் சொன்னார்கள் ...
சொன்னதில் புரிந்துக்கொண்டேன்
அவள் விதவை அல்ல தேவதை என்று...
ச .மௌனிஷண்முகம்