துப்பாக்கிகுழல்களுக்குள்!
குடியிருக்கின்றோம் நாங்கள்!
இன்றுவரைக்கும்!
அழுவதற்கும் சுவாசிப்பதற்கும் மட்டுமே !
அனுமதிதேவைப்படவில்லை.!
நாளையோ,மறுநாளோ!
காற்றையும் பரிசீலித்தே!
சுவாசிக்கவேண்டியிருக்கும்!
இதைப்போல அது அதைப்போல இது!
ஒன்றினுடாக இன்னொன்று!
இன்னொன்றினூடாக வேறொன்று!
அதுக்காக இது இதுக்காக அது!
எதுக்காக நாமென்று ஏதுமறியா நாளின்று!
காற்றினூடாக க் கடத்தல் !
தீயினூடாகத்திருட்டு !
அரசியலில் சமயம்!
சமயத்தினூடாகச் சாதீயம்!
சாதீயத்தினூடாக அரசியல்!
அரசியலால் அழித்தல்!
பக்தி பயமுறுத்தும் பயம் உயிர்கொல்லும் !
உயிரழிவில் பேய்மகிழும் !
பேய்களேகடவுளாகிவர பிரயத்தனப்படும், !
துப்பாக்கிகுழல்களுக்குள்!
நாங்கள் குடியிருக்கும்வரை
ஈழநிதி