இரவி!
ஆரம்ப பிடிமானம்!
குறைந்துதான் போய்விட்டது!
காலியான!
தேநீர்கொப்பையைக்!
கீழ்வைக்கையில்!!
•!
தாகத்தைப்!
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்!
தண்ணீரளவுக்கு.!
•!
எத்தனையோ!
பேனா திறப்புகள் மூடப்படுவதுண்டு!
எழுதலற்று.!
•!
எந்தப்புள்ளியில்!
தொடங்கி முடித்து வைக்கப்பட்டிருக்குமோ!
தெரியவில்லை!
இந்தக் கோலம்.!
•!
ஆந்திரா வரை சென்றழியும்!
புழுதி படிந்த லாரியில்!
என் பெயர்.!
•!
தென்னையும் பனையும்!
கள் சுரந்து எதிர்க்கிறது!
காந்தியை
இரவி