காலையில் எழுந்து!
கதவை திறந்தேன்!
வானம் என் வாசலில் !
வீழ்ந்து கிடந்தது.!
ஆங்காங்கே நட்சத்திரங்கள்!
சருகாய் கிடந்தன.!
சுற்றுமுற்றும் !
தேடிப்பார்த்தேன்!
சூரியனை காணவில்லை...!
உடைந்து விழுந்த நிலா!
புற்தரையெங்கும்!
பனியாய் படர்ந்திருந்தது....!
வீதிக்கு வந்தேன்!
வீதியை காணவில்லை!
இரவோடு இரவாக வெள்ளம்!
இழுத்துக்கொண்டு போனதாக சொன்னது!
மூழ்கி கிடந்த மின்சார கம்பம்.!
அழுவதற்காக உதடுகளை!
திறக்க முயன்றேன்!
ஆமைப்பூட்டுக்கொண்டு!
யாரோ பூட்டியிருக்கின்றார்கள்.!
விறுவிறு என்று ஓடிச்சென்று!
நேற்று கவிதை எழுதிய !
நோட்டை திறந்தேன்!
கவிதையையும் !
காணவில்லை!
எஞ்சியிருந்தன!
வெறுஞ் சொற்கள் மட்டும்
அஸ்மின், ஈழநிலா, இலங்கை