கல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு !
கற்பவன்; நிற்கிறான்; படையிலே! !
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம் !
கண்டு துடிக்குதே இடையிலே…! !
பேயர சாளுது நாட்டிலே!-இன்று !
பேனையை போடுறார் கூட்டிலே! !
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட !
காதலால் வந்தது றோட்டிலே…! !
நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம் !
நிம்மதி தேடுறார் குடியிலே! !
வாழ்வு நிலைப்பது “படி”யிலே!-இன்றேல் !
வாடிட வேண்டுநாம் அடியிலே! !
அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று !
அகதியாய் நனைகிறார் மழையிலே! !
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட !
வாக்கினால் வந்தெதம் தலையிலே! !
சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும் !
சுயநல முள்ளது மூச்சிலே! !
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில் !
வாழ்வது அவரவர் பொறுப்பிலே
அஸ்மின், ஈழநிலா, இலங்கை