நண்பர்கள் உணவுக்குள்!
நஞ்சூற்றி தரும்போது...!
அன்பென்று சொன்னவர்கள்!
அழிப்பதற்கு வரும்போது...!
பெற்றவனே பிள்ளையினை!
போதையிலே தொடும்போது...!
கற்றவனே மனசுக்குள்!
கழிவுகளை நடும்போது...!
உறவென்று வந்தவர்கள்!
உதடுகளால் சுடும்போது...!
வரவுக்காய் சேர்ந்தவர்கள்!
வாய்க்கரிசி இடும்போது....!
பொன்விளைந்த தேசத்தில்!
பிணவாடை எழும்போது....!
உணவின்றி ஒரு ஏழை!
உலகத்தில் அழும்போது....!
கடலே நீ தந்த!
காயமொன்றும் பெரிதில்லை....!
கடவுளே நீ எம்மை!
கொன்றாலும் தவறில்லை
அஸ்மின், ஈழநிலா, இலங்கை