நிலவுச் செவிலியின்!
மேற்பார்வையில்!
மலர் குழந்தைகளைப்!
பெற்றெடுக்கும் நான்!
ஈன்ற பொழுது!
பெரிதுவக்கும் தாய்...!
!
ஈன்ற சேய்க்கும்!
தாய்ப்பால் வழங்காப்!
பெண்களிடையே!
ஈன்ற தாய்போல்!
வண்டுகளுக்குத்!
தேன்பால் ஊட்டுகின்ற!
என்னை யாரும்!
மங்கையற் குவமைசொன்னால்!
மனம் வெதும்புகிறேன்...!
!
*!
நான்!
மன்மதன் அம்புகளை!
மலிவு விலைக்குத்!
தயாரித்தளிக்கும்!
முன்னோடி நிறுவனம்...!
!
மலர் வகையராக்கள்!
யாவும்!
இயற்கை வயாகராக்கள்!!
!
கொடுங் காமுகரும்!
மலரை முகராது!
மங்கையரை நுகர்வாரில்லை...!
!
ஏனோ!
நட்சத்திர மலர்கள்!
தூவப்பட்ட!
வான மெத்தையில்!
நிலவு மங்கை காத்திருந்தும்!
சூரிய மணாளன்!
கிரணத்தன்று!
பலரறிய நன்பகலில்!
கலவி புரிகின்றான்!!
!
* !
பெண்களைப் போல்!
நானும்!
பூப்படைகின்றேன்...!
இரவெனும் முறைமாமன்!
இருட்குச்சி!
கட்டிய பின்னரே!
பூப்படைகிறேன்...!
நட்சத்திர அத்தைமார்களின்!
நலிங்குடன்!
நிலவொளியில் மஞ்சல்!
நீராட்டு விழா...!!
!
பெண்கள்!
தலையில் பூவைப்பது!
என்னைப் பார்த்துத்தான்!!
என்னை!
அமங்கலி யாக்கியே!
பெண்கள்!
சுமங்கலி யாகின்றனர்...!
அவர்கள்!
அமங்கலிகளாகக்!
காட்சிதரக் கூடாதென்றே!
நான்;!
சுமங்கலி யாகின்றேன்!!
அமங்கலிகளுக்காய்!
நான் என்!
மலர்கள் உதிர்த்து!
மலராஞ்சலி செலுத்துவதும்!
உண்டு!!
!
* !
புன்னகை புரிவதில்!
எனக்கு ஈடுசொல்ல!
யாருண்டு இங்கே?!
உங்களால்!
புன்னகைக்க முடியவில்லை!
என்பதால்!
என் உதடுகளைக்!
காம்புடன் கிள்ளுவதோ?!
மலர்கள் என்!
முகங்கள் ஆகுமென்றால்!
என்னை!
கழுத்துடன் கிள்ளி!
தூக்கிலிடுவதோ?!
என்!
அங்கங்களை ஆய்ந்து!
அங்கங்கே தொங்கவிட்டிருக்கும்!
பூக்கடைகள் யாவும்!
கசாப்புக் கடைகளேயன்றி!
வேறென்ன?!
நீங்கள்!
திருமண சடங்குகளுக்காய்!
என்னிடம் வந்தால்!
மகிழ்வோடு தலைகுனிகிறேன்...!
பிண வீதிக்குப்!
பூமெத்தைகள் தேடி!
என்னிடம் வந்தால்!
அழுத வண்ணம்!
தலை குனிவிக்கப் படுகிறேன்!!
!
-அகரம்.அமுதா
அகரம் அமுதா