அந்தி சாயும் பொழுதொன்றில்!
நீ என்னோடு பேசி!
விடைபெற்றுச் சென்ற பின்னரான தனிமை!
துயருடைத்து வார்த்தைகளாயின!
உதடு கிழிந்து வலிகள் பெருகலாயிற்று!
பின்வந்த நாட்களில்!
காற்றலையோ……..!
முகில் கூட்டங்களோ………!
அல்லது ஒரு பட்சியோ…….!
உனைப்பற்றி எதுவுமே சொல்லிச் செல்வதாயில்லை.!
அந்தரித்தலைகிறது எனதாத்மா !
உனைப்பற்றியதான!
நினைவலைகளைக் கிழித்து!
உறக்கப் புதைகுழிக்குள் புதைந்து விடமுடியாதபடி!
நினைவின் எல்லா வாசல்களையும்!
நீயே அடைத்து நிற்கிறாய்!
இந்நேரம் நீ !
வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கிடையில்!
உறக்கமின்றியிருக்கக்கூடும்!
ஆனாலும்!
என்மீதான உனது முற்றிய நேசம்!
சற்றும் விடுபட்டு போகாதிருக்குமென நம்புகிறேன்.!
துப்பாக்கி ரவையோ……..!
பீரங்கிக் குண்டுகளின் சன்னங்களோ…..!
நம்மிருவரில் ஒருவரின் உடல்களை துளைக்கமுன்பு!
ஒரு தடவையாயினும்!
நாம் சந்தித்திட வேண்டும்.!
அப்போது!
வற்றாத நேசத்தின் ஒரு துளியையேனும்!
பகிர்ந்து கொள்வோம். !
- விசித்ரா
விசித்ரா