தேடல் - வெண்ணிலாப்ரியன்

Photo by Seyi Ariyo on Unsplash

குளிரில் பற்கள் நடுங்குகின்றன.!
இரவின் திகில்!
என்னையும் சிதிலமாக்க!
அசாதாரண நிசப்தக்காட்டில்!
மஞ்சள் பல்பின்!
அப்பிய சோகத்தில்!
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்!
என் சுவாசமிருக்க!
தேடிக்கொண்டிருக்கிறேன்.!
என்!
மனைவியின் மெட்டியை...!
பிணவறையில்.!
- வெண்ணிலாப்ரியன்
வெண்ணிலாப்ரியன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.