மூச்சு.. !
தந்திர முள்வேலியுள் பெறும்!
இயந்திர வாழ்வு தராது!
சுதந்திர வாழ்விற்கு உயிர்ப்பு. !
காற்று..!
விலை கொடுத்து வாங்காத!
விலையில்லா ஒளடதம்!
மலைப்பிரதேசத்து உயிர்ப்பு. !
நறுமணம்..!
இயற்கைப் பரிசாம் நல்!
உயிர்ப்புடை மலர்களால்!
உல்லாசச் சூழல், நல்!
உணர்வின் மகிழ்வால்!
உயிரும் மகிழ்வடைகிறது. !
புது வலிமையடைதல்..!
அருவிச்சாரலாக மனிதனை நிதம்!
மருவும் குளிர் மொழிகள்!
அருமை உறவிற்கு தரும்!
விருப்புடை உயிர்ப்பு. !
இளைப்பாறுதல், உயிர்த்தெழுதல்..!
வேலையில் இடைவேளை,!
வெயிலில் அருமை நிழல்,!
நாளின் இரவுத் தூக்கம்!
பாலைவனப் பசுஞ்சோலை மனிதனுக்கு.!
தாளின் புதுப் பக்க உயிர்ப்பு
வேதா. இலங்காதிலகம்