பாரதீ ஓர் ஜோதி .. சில நேரங்களில் - வைரபாரதி

Photo by Pramod Tiwari on Unsplash

பாரதீ ஓர் ஜோதி.. சில நேரங்களில் சில மனிதர்கள்..!
01.!
பாரதீ ஓர் ஜோதி!
------------------- !
பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்!
பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !!
ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது!
எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !!
!
செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்!
செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்!
இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்!
இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !!
!
விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?!
வீரபாரதியே உன்னோடு திhpந்திருக்கக்கூடாதா?!
'சுடு வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்!
சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?!
!
மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.!
மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்!
இனமது நானென்று நம்புகிறேன் - உன்!
இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!!
!
கார் மழை கைம்மாறு காணாது - உன்!
கவி வரி பலநூறு இது போலாகும்...!
பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்!
பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !!
!
02. !
சில நேரங்களில் சில மனிதர்கள்!
-------------------------- !
புறங்கூறுவோர்:!
புறரையே பேசும் 'பீழையோர்; மனம்!
பிய்த்தெறியப்படவேண்டிய மாமிச இனம்!
புறங்கூறியே வாழ்வில் மடியூம் - அவ்வுடல்!
புறங்காட்டில் நாய் நரி வாயில் திணியும்....!!
!
விதியை நம்புகிறவர்கள் :!
விதியினை நம்பும் வீணார்கள் - பத்து!
விரல்களையிழந்த முடவர்கள் - ஆறாம்!
மதியினை பெற்றிருப்பதேன்? - இவர்கள்!
மண்ணில் மனிதராய்ப் பிறந்ததேன்?!
!
வேலையற்ற வீணர்கள் :!
தேநீல் விழுந்த 'ஈ யை விட - இங்கு !
தினத்தந்தியில் விழுந்த விழிகளோ கோடி - நம் !
காசினியை வீண் பேசுமிவர்கள் - என்!
காலணி கூட தீண்டா குப்பைக்கூல சாதி !!
!
முதலைக் கண்ணீர் !
புளித்தாலும் அத்திராட்சையைப் புசிக்க நினைப்பர் !
புலம்பியழுதே தம் காரியம் முடிப்பர் !
களிப்பேயில்லா புதிய படைப்புகள் - இவர்கள்!
காரியக்கார கண் துடைப்புகள்!
!
வாழ்க்கையறியா வயதில் சிலர்!
அரும்பு வயதிலே 'அவ்வன்பில் தியூம் !
அறிவையிழந்த சிறகுகள் - இந்தியா!
இருக்கும் நிலை மறந்து!
இவர்கள் கொடுந்தீயில் வளரும் விறகுகள் !!
சில நேரங்களில் சில மனிதர்கள் !
சேற்று மணலில் செய்த ஈரபொம்மைகள்
வைரபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.