என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள் - துவாரகன்

Photo by Paul Esch-Laurent on Unsplash

துவாரகன்- !
இந்தத் தலைகள் !
எப்போதும் !
என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன. !
தனியே வெட்டி எடுக்கப்பட்ட தலைகளுக்கு !
சீப்புக் கொண்டு !
எந்த ஸ்ரைலிலும் !
என் கனவுகளில் !
நன்றாக வாரிவிட முடிகிறது. !
தளர்ந்து… இறுகி… !
தனியே வந்து விழும், !
உறுப்புக்கள் ஒவ்வொன்றும் !
என் கைப்பைக்குள் !
பத்திரமாக இருக்கின்றன.!
தனியே வெட்டி எடுக்கப்பட்ட !
ஒரு ஆட்டின் தலைபோலவே. !
துணிக்கடைகளின் முன்னால் !
மொடல் உருவங்கள் !
எடுப்பான தோற்றம்தான்.!
என்றாலும் !
அந்தத் தலைகள் மட்டும் !
தனியே தொங்கிக் கொண்டிருத்தல் !
இறைச்சிக் கடையில்!
இரத்தம் சொட்டச் சொட்ட!
கொழுவி விட்ட இறைச்சித் துண்டங்களாக !
எனக்குள் உருக்கொள்கின்றன. !
மேக்கப்காரன் கூட!
மேசையில் வைத்த !
பிளாஸ்ரிக் மொட்டைத் தலைகளுக்கு!
விதம்விதமாக முடி வைத்து !
மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்க்கிறான். !
தலைக்கு மட்டும் சம்பூ வைத்து !
குனிந்து நின்று !
தலை கழுவுதல் தரித்திரமென்று !
யாரோ சொன்னது ஞாபகம் வர !
வீதிகளும், கடைகளும், மேக்கப்காரர்களும் !
என்னை விரட்டுவதாக உணர்கிறேன்
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.