வாய்ப்பாடு - தணிகை அரசு

Photo by Mishaal Zahed on Unsplash

கடுகைக் கதையாக்கி !
நிழலை நிஐமாக்கி !
ஊதிப் பெரிதாக்கி !
உறவைக் கெடுத்த உத்தமர்களே ! !
முகமலரச் சிரித்துவிட்டு !
முள்ளால் சொல் செய்து !
முதுகில் குத்திய !
முன்னாள் தோழர்களே ! !
நாவுக்கு நரம்பும் !
வாந்திக்கு வரம்பும் !
நெஞ்சுக்கு ஈரமும் !
கோழைக்கு வீரமும் !
இல்லை என்று நினைவூட்டி !
ஈடற்ற நன்மை செய்தீர். !
என் பேனா செதுக்கிய பேரழகியோ !
எங்கு போனாள் என்றே தெரியவில்லை. !
தானே வந்தாள் !
ஒரு நாள் அருகில் !
தவித்தாள் தாங்கினேன் !
அழுதாள் தேற்றினேன் !
நானோ இன்று !
நிற்கிறேன் தெருவில் !
விழித்துக்கொள்வீர் ! !
வாழ்வில் நம்பிக்கெட்டோர்க்கு !
வாய்ப்பாடு நான்
தணிகை அரசு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.