பம்பரம்... முகவரி - படைவீடு அமுல்ராஜ்

Photo by Maria Lupan on Unsplash

பம்பரம்...முகவரி !
01.!
பம்பரம்...!
-----------------!
கென்னிப்பன் வூட்டு !
ஐயப்பன மிஞ்சரதுக்கு !
ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல ...!
அவங் செதுக்கித்தர !
பொம்பரத்துக்கு!
ஒரு கூட்டம் !
எப்பயும் அவங்கூட சுத்தும் ...!
பொம்பரத்துக்கினே !
காட்டுக்குப் போவாங்க ...!
பொர்சிமரம்தான்!
பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங்க ...!
சிலநேரத்துல !
அவுஞ்ச,!
கொடுகாலி,!
துரிஞ்ச மரங்கள தேடுவாங்க ...!
பொம்பரம் செதிக்கித்தரகேட்டா !
ஆணி உனதா, என்தான்னு கேப்பாங்க !
ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங்க !
ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா !
ரெண்ருவான்னுவாங்க ...!
தெருமுழுக்க !
அவங் செதுக்கன பொம்பரந்தாங்க வெளையாடும் ..!
அவங் வெச்சிருந்த !
சட்டித்தல பொம்பரத்த !
ஒருத்தனும் ஒடச்சதில்ல தெருவுல !
தரையில வுடாமலே!
கையில ஏந்தி அழகுகாட்டுவாங்க ...!
இப்பயெல்லா!
ஒரு பொம்பரத்தையும் தெருவுல பாக்கமுடியல !
ஐயப்பங் மட்டும் !
காட்டுக்கு போறத நிறுத்தல...!
இன்னமும் !
அவங் கொடுவா சத்தம் !
அந்த காட்டுமரங்கள்ள!
கேட்டபடிதாங் கெடக்குது ...!
ராவெல்லாம் !
எரியும் சாராய அடுப்புக்கு !
அவங் வெட்டியார்ர வெருவுதாங்க!
நின்னு எரியுதாம் !
!
02.!
முகவரி !
------------!
கை வலிக்க !
கொஞ்ச தூரத்திற்கொருதரம் !
கைப்பை சுமையை !
இறக்கி கொண்டுவரும் !
முகமறியா !
சகோதரியிடத்து !
''கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்''!
எனச் சொல்லியபோது !
அவள் பார்வையில் தெரிந்தது !
திருடன் என !
என் முகம்
படைவீடு அமுல்ராஜ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.