தெருவிற் தொலைந்த நிரபராதிகளின் மீட்கவியற்பாடல் - போஸ் நிஹாலே

Photo by Seyi Ariyo on Unsplash

மீந்திருந்த எல்லாச் சொற்களையும் !
அவர்களை நோக்கி வீசியாயிற்று !
அவர்கள் !
சிலுவையில் எழுதிய உனது முகம் பற்றிய கதைகளை !
அவற்றில் தேடுகிறார்கள் !
எக்காலத்திலும் திரும்பிவராத அச்சொற்கள் !
நீ ஒரு பறவையைப் போலிருந்தாய் என்பதைத் தவிர !
வேறெதையும் கொண்டிருக்கவில்லை !
உன்னால் நேசிக்கப்பட்ட !
நூற்றுக்கணக்கான கவிதைகளின் காதல் ததும்பும் வார்த்தைகளை !
நான் வைத்திருந்தேன்: !
குடிமயக்கத்திலும் !
சிகரெட் புகை நாற்றத்திலும் !
நீ எங்களோடிருந்ததற்கான அடையாளங்களை !
நான் வைத்திருந்தேன் நான் வைத்திருந்தேன் !
அவர்களோ அவற்றில் மின்கம்பிகளைச் செருகினார்கள் !
எல்லாம் முடிந்த பாழ் மௌனத்தில் விசமுட்களை ஏற்றினார்கள் !
அவ்வாறு நடக்காதென நானிருந்த கணத்தில் !
பார்வையைப் பிடுங்கி !
இந்தப் பிரபஞ்சவெளியில் ஒலியெழ வீசியதை நான் உணர்ந்தேன் !
குயில் தனது பாடலை பாலைவனங்களுக்கப்பால் !
எடுத்துச்சென்றுவிட்டது !
அவர்களோ !
எமது வாழ்வு பற்றிய அடையாளங்களனைத்தையும் கடலுக்கப்பால்: !
யாருக்கும் தெரியாத உவர்க்காடுகளில் புதைத்துவிட்டார்கள் !
நான் உணர்கின்றேன் !
நீயோ நானோ !
எமது தாய்களின் கலைந்தகேசத்தையும் !
கலங்கித் ததும்பும் விழிகளையும் !
அவர்களின் உள் விசும்பும் மன ஒலிகளையும் !
இனி எப்போதும் கேட்கவோ பார்க்கவோ போவதில்லை !
சிறைக்கதவின் துவாரங்களுக்கு வெளியே !
போஸ் நிஹாலே 03-1999 !
நன்றி சரிநிகர்
போஸ் நிஹாலே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.