நிலவோடு நீ வருவாய் - நாவாந்துறைடானியல் ஜீவன்

Photo by Jan Huber on Unsplash

நாவாந்துறை டானியல் ஜீவா- !
நீ விழித்திருக்கும் போது !
நான் தூங்கிறேன் !
நீ தூங்கும் போது !
நான் விழித்திருக்கிறேன். !
நீயொரு தேசமாய் !
நானொரு தேசமாய் !
ஆயினும் !
கனவில் கூட !
உன் !
கண்கள்தான் !
ஓ வென்று அழுதாலும் !
சீ என்று சினந்தாலும் !
மனதில் நிலையாய் !
நிற்பது !
உன் வார்த்தைகள் !
மட்டும்தான் ..! !
நீயிருக்கும் போது !
என் இதயம் !
இடிபோல !
சுமைகளும் !
சுகமாய் சுமக்கும் !
நீயில்லா !
என்னிடம் !
இளவம் பஞ்சுக் !
கனம் போல் !
நெஞ்சில் !
இறங்கினாலும் !
நெருப்பில் விழுந்த !
புழுவைப் போல் !
நெகிழ்கிறேன் . !
தெருவில் !
இறங்கினால் !
நிலவோடு !
நீ வருவாய் !
நான் !
வேலைக்குச் சென்றால் !
என் உடையோடு !
நீ ஒட்டிக் கொள்கிறாய் !
வீடு திரும்பி !
தூங்க !
துணைக்கு !
நீ வருகிறாய் !
என் உடலே !
உனக்காக !
உருவெடுத்திருக்கின்றது. !
என் விழிகள் !
விழித்தாலே !
உன் நினைவோடு !
நீர்த்திவலை !
ஆயினும் ..? !
கடந்த கால வாழ்க்கை !
என்னைப் பக்குவப்படுத்தியதினால் !
நான் !
எனக்கான !
விடுதலையை !
வெல்ல வேண்டுமென்றென்.... !
நீ !
உன்னால் அதுவரை !
காத்திருக்க முடியாதென்றாய் !
நம் நெருக்கம் !
நேர்கோட்டில் !
நகர மறுக்க !
முறிந்தது !
நம் உறவு !
உன்னைப் பிரிந்தது !
துயரமா ? !
அது சொல்லி !
மாளத் துயரம் !
குற்ற உணர்ச்சி !
கூனிப்போக !
மனசு வலித்தது. !
வெகு நாளாய் !
தூக்கம் வரல... !
நீ பிரிந்த போதே !
என் உயிரும் !
பிரிந்திருக்க வேண்டும்.... !
எதற்காக இன்னும் !
என் உடலில் உயிர் ..? !
............. !
பனிப்புலத்து !
பட்டமரமொன்று !
தனக்குள் தன்னுயூரை !
தேக்கி வைத்திருப்பது போல்
நாவாந்துறைடானியல் ஜீவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.