தொலைந்துவிட்ட சொந்தங்கள் - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by Yender Fonseca on Unsplash

பொட்டிழந்து பூவிழந்து!
புதுப் பட்டிழந்து!
கட்டுப் பெட்டியுடன்!
கடல்கடந்து சென்றீர்.!
அமுதம் பொழியும் வானம்!
அன்று பொழிந்ததெல்லாம் - உங்கள்!
அன்புச் செல்வங்களின் உயிரை!
அள்ளிச் செல்லும் குண்டுகள்தான்.!
மழலைச் செல்வங்கள்!
மறுசொல் உதிர்ப்பதற்குள்!
மரணமெனும் தூரிகை!
மாற்றியது வரலாறைத்தான்.!
பரிதவித்து கண்முன்னே மாண்ட!
பச்சிளம் பாலகர்தான் எத்தனையோ!!
பாடையிலே கொண்டு சென்ற!
பசும் பாவைகள்தான் எத்தனையோ!!!
விதைத்தனர் விசமிகள்!
விந்தைமிகு பயிர்களை - அவை!
விடிவதற்குள் முளைத்தனவே!
விதவைகளாய் இத்தரையினிலே.!
கண்டதுயர் கணக்கில்லை!
கண்ணிற்கூட நீரில்லை!
கண்ணாளன் மரித்தால்கூட!
கலங்குதற்கு உங்களிடம்.!
இத்தனையும் இழந்து!
இத்தரை மறந்து!
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து!
புதுயுகம் படைத்திடவே.!
தேன்மதுரத் தமிழோசை போதும்!
தமிழரெனத் தலை நிமிர!
இயல் இசை நாடகம் - புலம்பெயர்!
இலக்கியங்கள் படைத்திடவே.!
இத்தரையில் விட்டபிழை வேண்டாம்!
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென!
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு!
உயரட்டும் இமயம் வரை.!
தொலைத்துவிட்ட சொந்தங்களை - உயர்!
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்!
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை!
தொலைவில் இருந்து கொண்டே
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.