தோழமைக்கு வலிமையெது? - மன்னார் அமுதன்

Photo by engin akyurt on Unsplash

பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி!
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு!
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்!
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா!
!
ஊனன் கண்ட கனவு மெய்க்க!
உடலை வருத்தி உழைத்தோம்!
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை!
உதறுகையில் திகைத்தோம்!
!
பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா!
வாழ்க்கையென்று நினைத்தோம்!
பாசத்தோடு அரவணைத்து - உன்!
வேசங்களை மறைத்தோம்!
!
கருத் துரைக்க அழைத்திடுவாய்!
மறுத் துரைத்த தில்லை!
மறந்து போன நாட்களுண்டு; மனம்!
மரத்துப் போன தில்லை!
!
ஆசுகவி உரைத் வர்கள்!
கொண்ட தில்லை பட்டம்!
ஆறுகவி புனையு முன்னே!
உரைக்கிறாய் நீ சட்டம்!
!
தோழமைக்கு நல்ல சான்று!
கொடுப்ப தில்லை உயிரை!
தோழனுக்கு தோழனாக!
வாழ்வதே எம் வலிமை
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.