மின்னல் இளவரசன் கவிதைகள் 21-10-07 - மின்னல் இளவரசன்

Photo by Tengyart on Unsplash

செந்தாமரை !
வண்டு உனைக் கண்டு கொண்டது!
மதுவிலக்கு இல்லாத மாளிகையாக!
மொட்டிலிருந்து மலராக!
சூரியனுக்கு நீ சொந்தமானாய்!
மொட்டாக இருந்தபோது!
உனைச் சுற்றாத வண்டு!
மலர்ந்தபோது மயங்கி விழுந்தது. (தேன் மதுவருந்தி) !
---------------------------------!
காக்கை !
ஐந்தறிவு பெற்ற காக்கையிடம் உள்ளது!
ஆறறிவு படைத்த மனிதனிடம் இல்லாதது!
பகிர்ந்துண்ணும் பண்பு!
ஒற்றுமையை உன்னிடமும்!
உழைப்பை எறும்பிடமும்!
இன்னமும் மனிதன் கற்க மறுக்கிறான். !
-------------------------------!
ரயில் சிநேகம் !
தாமரை இலையும்!
தண்ணீரும்!
ஒன்றோடு ஒன்று!
ஒட்டாமல், சிநேகமாய்!
ரயில் சிநேகமாய்!
உன்னை நான்!
உயிர் சிநேகிததியாய் நினைத்திருந்தேன்!
நீயோ என்னை!
ரயில் சிநேகிதனாய்!
மறந்துவிட்டாய். !
-------------------------------!
புலவர் !
தாலாட்டு பாட்டுதனில்!
தவப் புதல்வன் தூங்குகிறான்!
தாய் பாடும் பாடலுக்கு!
எப்-புலவன் ஈடுசெய்வார்.!
சேற்று வயல்!
கால் புதைத்து!
நாற்று நடும் பெண்களுக்கு!
பாட்டு தரும் புலவர் யார்.!
-------------------------------!
ஈகை !
உன்னிடம் யாசிப்பவனுக்கு!
யோசிக்காமல் கொடு!
குறைந்த பட்சம் அன்பையும்!
ஆறுதலையுமாவது.!
இருப்பவர்க்கும்!
இல்லார்க்கும்!
இடையில் பகை!
இருக்கவேண்டியதோ ஈகை.!
-------------------------------!
புன்னகை !
பொன் நகை !
இல்லையென்றால்!
பரவாயில்லை!
உன் புன்னகை!
போதும் வாழ்ந்திடுவோம்!
-------------------------------!
நெம்புகோல் !
நீர் இறைக்கும்!
நெம்புகோல்தான்!
ஏற்றமாகும் !
வியர்வையெனும் நீர்!
இறைத்தால்!
உன் வாழ்வும் ஏற்றமாகும். !
-------------------------------!
நேர்மை !
இனி வருங்காலங்களில்!
அகராதியில் மட்டும்!
அர்த்தத்தை தேடலாம்!
அங்கும் கூட!
அதற்கு இடமின்றி போகலாம். !
-மின்னல் இளவரசன்
மின்னல் இளவரசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.