எனக்கு முன்ன!
சாமிக்கிட்ட போன எஞ்சாமி!
ஒன்னோட நானும் போயிருந்தா!
மண்ணோட போயிருக்கும் !
இந்த பொறப்பு!
நாய்க்கும் வேணா இப்ப!
நான் பொழைக்கும் !
இந்த பொழப்பு!!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு!
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை!
ஓஞ்சி போன சென்மமின்னு!
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!!
மவனுக்கு பால் குடுத்த!
மாரும் காஞ்சிப்போச்சி!
மருமவ மகராசியால!
வயிறும் வறண்டு போச்சி!!
பார்வை கொறைஞ்சிப் போச்சி!
கேள்வி மந்தமாச்சி!
நாக்கு ருசி செத்து போச்சி!
பாழாப்போன பசி மட்டும் போவலியே!!
நாள பின்ன நான் செத்தா!
வாக்கரிசி வெப்பீங்களே!
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த!
பெத்தவளுக்கும் போடுய்யா!
பசியால செத்தான்னு பேரு வேணா!
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!!
-- கோ.சிவசுப்பிரமணியன்
கோ.சிவசுப்ரமணியன்