01.!
புரியாத சலனம் !
---------------------------- !
திருவிழாவில் பார்த்த !
நந்தவனம் !
திகைப்பில் உறைந்திருப்பான் !
ஆரம்பா பாடசாலை !
அறிமுகங்கள் ஒவ்வொன்றும் !
பட்டணம் திரும்பிய !
பாரிஜாத மலர்களாய் தெரிகின்றன !
வரவேற்ப்பு வாசனை !
தனக்குள்ளவன் !
கோடை பொசுக்கல் உணர்கிறான் !
சிவப்பு கனகாம்பரம் !
மஞ்சள் ரோஜா !
வாடகை வர்ணங்களில் !
பழைய அறிமுக மொட்டுக்கள் !
குதிரை ராட்டினம் !
சுழன்ற வேகத்தில் !
பயந்த மல்லிகை இதழில் !
பால் ஐஸ் சுவைத்த தடம் !
கூப்பிடு தொலைவில் !
தங்க தாவணியில் !
லில்லி மலர் !
புலகாங்கிதம் கலந்த !
அவன் பார்வையில் !
தேடல் ஆதிக்கங்கள் !
ராட்சச சக்கரத்தில் !
முகமறிந்த குறிஞ்சி !
புன்னகை பகிரும் !
தோழிகளுடன் !
அவனது பொன்வண்டு இளமை !
மகரந்தம் திருட மறுத்து !
கருவண்டு போர்வையில் !
மறைந்து வைரநிலைஎட்டும் !
பேச துடிக்கும் புலன்கள் !
கை பிசைகின்ற சூழல் !
அலைக்கழிக்கிறது இன்னமும் !
திருவிழா வழிப்பறி !
நந்தவனம் தற்காலிகம் !
சலனம் மிச்சம் !
ஆண் மகன் மனசு !
வந்து போகிற பறவைகளுக்கான !
சரணாலயம் !
எல்லா காலங்களிலும் .!
02.!
மனச்சுருள் மாசு! !
-------------------------- !
இதய கூடத்தின் !
சாளரம் திறந்துகொள்ள !
பொசுக்கி போயிருக்கும் !
உனது ஏளனம் !
நினைவுக்கெட்டாமலே !
உன்னிடம் உள்மனதை !
திருடிக்கொண்டது உண்மை தான் !
தொலைத்திருப்பேன் !
கடந்து போகிற நிமிஷங்களில் !
புதிதாய்.. புதிதுபுதிதாய் !
இதய ஜாலங்கள் !
தொலைத்ததன் காரணம் !
முக்கியமாய் படவில்லை !
கருப்பு அங்கி !
கழற்றபட்டாலொழிய !
விடியலின் விலாசம் !
புதுப்பிக்கப்பட போவதில்லை !
இன்னமும் என்னுள் !
ஒளிந்திருக்கவில்லை நீ !
விலாசம் தேட முற்படு !
தண்ணீர் முத்து !
எந்த சிப்பியில் அடக்கமென !
அறிந்துகொள் !
தெரிவி .. !
காரணம் தெரியாமல் !
கணக்கிறது !
மனச்சுருள்

கொ.மா.கோ.இளங்கோ