ஜிகாத் - காஜா

Photo by FLY:D on Unsplash

எல்லாவற்றையும் !
நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன் !
உன் ஒவ்வொரு அசைவையும் !
நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் !
டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து !
வெள்ளப் பெருக்கில் மிதந்துவரும் !
பிணங்களை !
கண்ணீர் ததும்பும் விழிகளோடு !
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன் !
யார் அடியெடுத்து வைத்தாலும் !
மனிதர்கள் மனிதர்களாக !
மாறப்போவதில்லை !
வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும் !
கற்களாகவும் வெறியர்களாகவும் !
மாறுவதை !
நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் !
என் பசித்த வயிற்றுக்கும் !
என் ஒருபிடி சோற்றுக்கும் இடையில் நின்ற !
அல்கபீர் கேரோ, !
ஹீப்ளி ஈதாக் மைதானத்தில் !
திரிசூலத்தைப் போலப் பாய்ந்து நின்ற !
அந்தக் கொடிமரம், !
என் சாணக்கிய மூளைக்கும் கீழே !
நொறுங்கிய மதுரா !
எல்லாவற்றையும் நான் !
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். !
இந்தி வாரம் என் வீட்டிற்கு வந்த !
ஒளிவிளக்கு என்று நினைத்தேன் !
ராஜீவம் என் மரபின் !
நறுமணம் என்று நினைத்தேன் !
அவற்றை என் தலையால் தாங்கினேன் !
என் கனவு மலர்களின் மீது !
நடந்த பிறகு !
என் பைஜாமாவைத் திறந்து !
என் மதநம்பிக்கையை !
பார்த்த பிறகு !
நீங்களும் மாறினீர்கள் !
வாமனின் காலடியாக !
கொடூரமாக !
என்னை வெட்டிய பிறகு !
என் இரத்தத்தால் திலகமிட்ட பிறகு !
காகிதப்பூ குடியுரிமையுடன் மட்டும் !
நான் எஞ்சி நிற்கிறேன் !
இடிப்பதற்கு எதுவுமே இல்லாமல் !
நீங்கள் எரிச்சலடைந்திருக்கலாம் !
பொறுமையிழந்திருக்கலாம் !
உங்கள் கழுகுக் கண்கள் !
ஒருமுறை நோட்டம் விடட்டும் !
எங்கள் பைத்தியக்காரப் பாட்டன் ஒருவன் !
எங்கள் பாட்டியின்மீது !
கொண்ட காதலை !
பால்நுரையாக மாற்றிக் கட்டிய !
அந்த நிலவொளி மாளிகை !
யமுனைக் கரையின் ஓரத்தில் !
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது !
தில்லியின் மேட்டில் !
கிழக்கு வானத்தைத் துண்டித்து !
வைத்தது போலவும் !
இரத்தத்தைப் பூசிக் கொண்டது போலவும் !
இருக்கிறது அந்தக் கோட்டை. !
உன் மதவெறிக்கு !
இன்னும் இருக்கிறது தீனி !
குதுப்மினார், சார்மினார் !
புலாந்த், தர்வார், ஜீம்மா மசூதி !
மெக்கா மசூதி, மகாராஜா அரண்மனை !
அனைத்தும் என் சுவடுகள். !
இடித்துக்கொண்டே இரு !
நீ இடித்தபோதும் சரி !
தொண்டைகளை அறுத்தபோதும் சரி!
கேள்விகளே இல்லை !
ஆனால் நீங்கள் !
நாட்டைப் பிளந்து !
கிராமங்களில் வளர்ப்பது மிருகங்களை. !
என்னால் தாங்க முடியவில்லை !
பிணத்தைப் புணர்ந்து பிழைக்கும் !
உனக்கு !
ஊயிர்த்தெழ வைக்க !
பிணங்கள் தேவையென்றால் !
இனி தவிர்க்க முடியாது !
விழும் முதல் பிணம் !
உன்னுடையதாகத்தான் இருக்கும். !
- காஜா (புதிய கையெழுத்து: தற்கால தெலுங்குக் கவிதைகள் தொகுப்பு) !
- காஜா 1969 இல் பிறந்தவர். பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர்
காஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.