இலையுதிராக் காலம் - ஹேமா

Photo by Seyi Ariyo on Unsplash

விட்டாச்சு லீவு,!
பாட்டி வீட்டுக்கு பயணம்.!
ஒத்த ஓலக் குடிசையில!
காத்திருக்கும் என் பாட்டி. !
போன பொங்கலுக்கு வாங்கின பானையில !
எரும தயிருல ஊறவச்ச பழைய சாதமும்,!
பக்கத்துக்கு தோட்டத்துல உதிர்ந்த மாவடுவும்!
எனக்காக காத்திருக்கும். !
பக்கத்து வீட்டு தெண்டுல்கரும், எதிர் வீட்டு டோனியும்,!
மட்டையுடன் கண்முன் வந்து போனார்கள்.!
வாடகை சைக்கிளும், வாய்க்கால் வரப்பில திரிஞ்சதும்.!
நினைப்புல வந்து போச்சி .!
ஊர்க்கோடியில் பட்டம் விடவும் ,!
ஊருணியில் குளிக்கவும் ஆச வந்துச்சி. !
பனைமரக் காத்துல, பாட்டி மடில படுத்துக்கிகிட்டு!
விக்கிரமாதித்தன் கத கேட்க நினைப்பு வந்துச்சு.!
ஊர்க்கோடி அய்யனாருக்கு, காசு முடிஞ்சு நேர்ந்துக்கனும்!
வருஷத்துக்கு ரெண்டு கோடைக்காலம் வரணும்னு
ஹேமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.